Welcome to home page
மாணவத்தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி
2011/12 ம் ஆண்க்கான புதிய மாணவத்தலைவர்களுக்கான இரு நாள் தலைமைத்துவ பயிற்சி நெறியானது வாமி நிறுவனத்தின் அணுசரணையின் கீழ் திரு.எம்.எஸ்.எம். ரஸீன் ஆசிரியரின் ஏற்பாட்டின் கீழ் பாடசாலை உசாமா மண்டபத்தில் கடந்த 19, 20ம் திகதிகளில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வடமேல் மாகாண பொலிஸ் அத்தியட்சகர் திரு. புஜித ஜயசுந்தர அவர்களின் உரை உட்பட பல்வேறுபட்ட துறை சார்ந்த பிரமுகர்களது உறைகளும் இடம்பெற்றன. மாணவர்களின் பல்வேறுபட்ட திறன்களை வளர்க்கும் வகையிலான செயற்பாடுகளும் இடம்பெற்றன.
புதிய மாணவத்தலைவர்கள் தெரிவு 2011/122011/12ம் ஆண்டுக்கான புதிய மாணவர் தலைவர்களுக்கான இலட்சினை சூட்டும் நிகழ்வும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கும் நிகழ்வும் அதிபரின் தலைமையின் கீழ் 2011-11-04 ம் திகதி வெள்ளிக்கழமை காலை 10.00 மணியளவில் பாடசாலை உஸாமா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. பீ.சுபதாஸ அவர்கள் கலந்து கொண்டார். மேலும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் எமது பாடசாலையின் பழைய மணவரான ஜேர்மனியில் வசிக்கும் ஹமீம் மொஹமட் நஸார் என்பவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட மல்டிமீடியா புரொஜெக்டர் மற்றும் மூன்று மடிக்கணினிகள் என்பன அவரது தந்தையினால் அதிபரிடம் உத்தியோக ரீதியாக கையளிக்கப்பட்டது. மேலும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களது பெற்றொரினால் ஒரு தொகுதி ஒலிபெருக்கி சாதனங்கள் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்த்தலைவர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டதன் பின்னர் ஆசிரியர் எம்.எஸ்.எம் ரஸீன் (நளீமி) யினால் மாணவத்தலைவர்களின் கடமைகள் பற்றிய விளக்கமொன்றும் முனவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது மிகவும் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு நவீன தொழினுட்ப சாதனங்களை கையாண்டு மேற்கொள்ளப்பட்டமை அனைவரினதும் பாராட்டை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக்கு தேவையான கற்றல் உபகரணங்களை அன்பளிப்புச் செய்தல்
இன்று எமது பாடசாலையின் பழைய மாணவராகிய ஜேர்மனியில் வசிக்கும் ஹமீம். எம். நஸார் என்பவர் பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் நவீன தொழினுட்ப சாதனங்களை பயன்படுத்தி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைக்கு மூன்று லெப்டொப் கணினிகளையும் (Laptop) ஒரு பல்லூடக எறிகருவியையும் (Multimedia Projector)அன்பளிப்புச் செய்தார். எமது பாடசாலையின் முன்னேற்றத்தில் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டுவரும் இவர் ஏற்கனவே ஒரு டிஜிட்டல் கமரா மற்றும் போட்டோ கொப்பி இயந்திரம் போன்றவற்றையும் அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பொருட்களை உத்தியோகபுர்வமாக கையேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிபர் பாடசாலையின் பழைய மாணவர்களின் பங்களிப்புக்கள் பாடசாலையொன்றின் வெற்றியில் மிக முக்கியமான பங்கை வகிப்பதாக குறிப்பிட்டதுடன் பாடசாலை சமூகத்தினது நன்றிகளையும் தெரிவித்தார். தேசிய ஆசிரியர் தின நிகழ்வுகள் 2011
தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளும் ஆசிரியர் பாராட்டு விழாவும் அதிபரின் தலைமையின் கீழ் அனைத்து ஆசிரியர்களினதும் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடமம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதான அம்சமாக மாணவர்களால் ஆசிரியர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஆசிரியர்கள் தமது திறமைகளையும் மேடையில் வெளிக்காட்டியதுடன் உபதேசங்களையும் வழங்கினர்.
|











































