நிகழ்வுகள்
2010 - 10 -18
-
2010 ம் ஆண்டக்கான வலய மட்டத்திலான ஆங்கில மொழித்தின நிகழ்வுகளில் திறமை காட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது
-
தரம் 5 இனை சேர்ந்த சுமையா என்ற மாணவி WAMY நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்கான நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
-
இஸ்லாமிய வங்கியமைப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இலங்கை வங்கியைச் சேர்ந்த உயர் அதிகாரிகளினால் நடாத்தப்பட்டது இதில் மாணவர்களுக்கு வட்டியில்லா வங்கியமைப்பு பற்றிய விளக்கம் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.
2010 - 11 - 08
-
மாகாண கல்விக் காரியாலயத்தினால் ஏற்பாட்டின் கீழ் Oracle நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட Think Quest எனும் செயலமர்வில் எமது பாடசாலை சார்பாக கணனி பொறுப்பாசிரியர் கலந்து கொண்டார்.
2010 - 11-14
-
பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான மூன்று மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பாடசாலை அபிவிருத்திக் குழுவின் அணுசரணையுடன் பாடசாலை அதிபரின் தலைமையின் கீழ் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் எமது பாடசாலையின் முதல் மாணவனான ஐனாப் பீர் முஹம்மத், முதல் மாணவியான ஐனாபா அஸ்மா பீபி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
2010 - 11 -16
-
தரம் 5 மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது
2010 - 11 - 16
-
அதிமேதகு ஜனாதிபதியவர்களின் இரண்டாம் முறை பதவியேற்பு நிகழ்வு மற்றும் அவரது பிறந்த தினத்தினையொட்டி நாடளாவிய ரீதியாக ஒழுங்கு செய்யப்பட்ட மரம் நடுதல் நிகழ்வுக்கமைவாக எமது பாடசாலையின் அதிபரின் தலைமையின் கீழ் மரம் நடும் வைபவம் இடம்பெற்றது.
2011-04-20
-
எமது பாடசாலையில் 2011.04.20 ம் திகதி இறத்த தான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 9 மணி தெடக்கம் மாலை 6 மணிவரை இடம்பெற்ற இந்நிகழ்வில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு தமது பெருமதிமிக்க பங்களிப்பினை வழங்கினர்.
2011-04-21
-
வலயமட்ட பரிசோதகர்குழு எமது பாடசாலைக்கு விஜயம் செய்து மேற்பார்வை பணிகளில் ஈடுபட்டது. குறிப்பாக பண்புத்தர விருத்தி தொடர்பான செயற்பாடுகள் மேற்பார்வை செய்யப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டதுடன் மேம்படுத்த வேண்டிய விடயங்கள் பற்றியும் சுட்டிக்கபட்டப்பட்டமை முக்கியமானதாகும்.
2011-04-29
-
தரம் 11 மாணவர்களின் பெற்றோர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பாடசாலையின் உஸாமா மண்டபத்தில் அதிபரின் தலைமையின் கீழ் இடம் பெற்றது. குறிப்பாக மாணவர்கள் முதலாம் தவணையில் பெற்ற புள்ளிகளை பெ்றறோர்களுக்கு அறிவிப்பதுடன் அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த ஆசிரியர்கள், மாணவர்கள, பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. மாணவர்களின் மாலைநேர வகுப்புக்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டமை முக்கியமாகும். இக்ககூட்டத்துக்கு அதிகமான பெற்றோர் கமூகமளித்தமை குறிப்பிடத்தக்கது.
2011-05-12
-
எமது பாடசாலையில் சுமார் 32 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்ற மூத்த ஆசிரியையான எ.எச்.உம்முரஹ்மா அவர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை வைபவம் அதிபரின் தலைமையின் கீழ் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியை பாடசாலைக்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளை ஆசிரியர்கள் உற்பட மாணவர்களும் நினைவு கூர்ந்தனர்.
2011-05-13
-
தரம் 10 மாணவர்களின் பெற்றோர்களுக்கான பொதுக்கூட்டம் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது. முதலாம் தவணையில் மாணவர்கள் பெற்ற புள்ளிகள் பற்றியும் பின்தங்கிய மாணவர்கள் தொடர்பாக மேற்கோள்ளவேண்டிய மேம்பாட்டு நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
2011-05-15
- தரம் 5 மாணவர்களின் பெற்றோர்களுக்கான பொதுக் கூட்டம் ஆரம்பப் பிரிவு அதிபரின் தலைமையில் நடைபெற்றது
2011-05-17
- தரம் 11 மாணவர்களுக்கான விஞ்ஞான பாட செயலமர்வு இன்று எமது பாடசாலையில் இடம்பெற்றது. அல்அஸ்ரக், அல்ஹுதா மகாவித்தியாலயங்களின் மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
2011-05-20
-
இவ்வருடம் உயர்தரத்தில் இணையவிருக்கும் மாணவர்களுக்கானமுன்னோடி நிகழ்ச்சித் திட்டமொன்று இன்று பாடசாலையின் புதிய விஞ்ஞான கூடத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் குறித்த மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
2011-05-20
-
இவ்வருடம் உயர்தரத்தில் இணையவிருக்கும் மாணவர்களுக்கானமுன்னோடி நிகழ்ச்சித் திட்டமொன்று இன்று பாடசாலையின் புதிய விஞ்ஞான கூடத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் குறித்த மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
2011-05-22
-
பாடசாலை மேம்பாட்டுக்குழுக் கூட்டம் இன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. பெற்றோர் சார்பாக 6 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், செயலிழந்து காணப்பட்ட பழைய மாணவர் சங்கம் மீண்டும் செயற்படல் வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2011-5-28
-
பாடசாலையில் நடமாடும் பொதுச் சேவை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.
2011-06-03
- பாடசாலை மேம்பாட்டுக் குழுக்கான பெற்றார் சார்பாக அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான பொதுக் கூட்டம் இன்று பாடசாலை உசாமா மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வின் போது பெற்றார் சார்பாக 6 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், பழைய மாணவர்கள் சார்பாக 3 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். பாடசாலை ஆசிரியர்கள் சார்பாக அதிபர், உபஅதிபர்கள் இருவரும் ஒரு ஆசிரியரும் தெரிவு செய்யப்பட்டனர்.
2011-06-09
- பாடசாலை விவசயக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட களப் பயனத்தில் தரம் 11,10 மணவர்கள் கலந்து கொண்டனர்.
2011-06-10
- இவ்வருடத்துக்கான பாடசலை மேம்பட்டுக் குழுவின் முதல் கூட்டம் இன்று படசலை வாசிக சலையில் இடம்பெற்றது.
2011-06-13
- பாடசாலை தொடர்பான குறுஞ்செய்திகளை Twitter சேவையின் ஊடாக பாடசாலை சமூகத்துக்கு தெரிவிக்கும் சேவை annoorcentral எனும் பெயரில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பாடசாலை தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டமை முக்கியமாகும்.
2011-06-14
- உயர்தர மாணவர்களுக்கான கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு நிகழ்வொன்று அதிபரின் தலைமையின் கீழ் வழகாட்டலுக்கு பொறுப்பான ஆசிரியரின் ஏற்பாட்டில் வலய இணைப்பாளரினால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த செயலமர்வில் அதிகமான மாணவர்கள் பங்குபற்றினர்.
2011-06-15
- எதிர்வரும் 25,26ம் திகதிகளில் நடாத்த தீர்மாணித்ததுள்ள பாடசாலை மட்ட கண்காட்சி நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இதில் படசாலை கண்காட்சிக் குழு உறுப்பினர்களும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
2011-06-6,7,8
- இம்மாதம் 6,7,8 ம் திகதிகளில் ”நாம் ஆக்கத்திறன் மிக்கவர்கள்” எனும் தொணிப்பொருளில் கல்விக் கட்சியொன்று இடம்பெற்றது. பாடசாலை பழைய மாணவர்களின் அனுசரனையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இக்காட்சியில் டிபருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக வலயத்தில் உள்ள சுமார் 35 பாடசாலைகளின் மாணவர்கள் காட்சியில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
2010-07-27
- 2010ம் ஈண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பதக்கம் சூட்டும் விழா மற்றும் வலய, கோட்ட மட்டத்தில் இடம்பெற்ற ஆங்கில மொழித்தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு என்பன காலைக்கூட்டத்தை தொடர்ந்து மைதானத்தின் வெளியரங்கில் இடம்பெற்றது.
2011-07-28
- இம்முறை க.பொ.த (உ/த) பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் ஏற்பாடு செய்த சிற்று வைபவமும் பிரியாவிடை நிகழ்வும் பாடசாலை உஸாமா மண்டபத்தில் இடம்பெற்றது. இன்றுடன் பாடசாலை 2ம் தவணை பரீட்சை உத்தியோகபூர்வமாக நிறைவு பெற்றது.
2011-07-29
- இன்று புனித ரமழான் மாதத்துக்கான தவணை விடுமுறை உத்தியோகபுர்வமாக வழங்கப்பட்டது.
2011-08-15
- பாடசாலைக்கான புதிய மைதானமொன்றினை அமைக்கும் நோக்கில் ஊர் மக்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட வயல்காணியை செப்பணிடும் பணிகள் பாடசாலை பழைய மாணவர் சங்கதினரால் உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2011-08-21
- இன்று பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், ஐக்கிய அறபு இராச்சிய தூதரகத்தின் அணுசரனையில் இப்தார் நிகழ்வொன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
2011-09-05
- இன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்தன.
Events












